முக்கிய செய்திகள்:
டெல்லியில் ஆட்சியைப் பிடிப்பது யார்? - சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - பா.ஜ.க. கடும் போட்டி

டெல்லி மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 11,753 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு கோடியே 19 லட்சம் பேர் வாக்களிக்கும் இத்தேர்தலில், 69 பெண்கள் உட்பட 796 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தொடக்கத்தில் வாக்குப்பதிவு மந்தகதியில் இருந்தபோதிலும், நேரம் செல்லச் செல்ல விறுவிறுப்படைந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்தனர். 3 மணி நிலவப்படி 48 சதவீத வாக்குகள் பதிவானது. இத்தேர்தலில், சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், ஆட்சியை பிடிப்பது யார் என்பது வரும் 8-ம் தேதி தெரியவரும்.

மேலும் செய்திகள்