முக்கிய செய்திகள்:
பாலியல் புகாரில் சிக்கியுள்ள நீதிபதி கங்குலி பதவிவிலக பாரதிய ஜனதா, திரிணாமூல் போர்க்கொடி - அரசியல் கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

பாலியல் புகாரில் சிக்கியுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. கங்குலி, மேற்குவங்க மாநிலத்தின் மனித உரிமை ஆணைய தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவேண்டும் என கோரிக்கை வலுக்கிறது.

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. கங்குலி மீது, இளம் பெண் வழக்கறிஞர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, குழு அமைத்து விசாரணை நடத்த, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. சதாசிவம் உத்தரவிட்டிருந்தார். இந்தப் புகாரினை, நீதிபதி திரு. கங்குலி தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பாலியல் புகாரில் சிக்கியுள்ள திரு.கங்குலி, மேற்குவங்க மாநில மனித உரிமை ஆணைய​தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டும் என பாரதிய ஜனதா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. எனினும், இந்த கோரிக்கையை திரு. கங்குலி நிராகரித்துவிட்டார்.

மேலும் செய்திகள்