முக்கிய செய்திகள்:
எரிசக்தி துறையில் புதிய வளங்களை கண்டறிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் - பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு

எரிசக்தி துறையில் புதிய வளங்களை கண்டறிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் இயற்கை எரிவாயு குறித்த ஆசிய நாடுகளின் மாநாட்டை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இன்று தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், புதிய எரிசக்தி வளங்களை கண்டறிய தமது அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதாக குறிப்பிட்டார். நிலத்தடி மற்றும் கடல் பகுதி எண்ணெய் வளங்கள், எரிவாயு வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். 2020-ம் ஆண்டு வாக்கில் இந்தியா எரிசக்தி நுகர்வில் 3வது இடத்தை பெற்றுவிடும் என்றும் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்