முக்கிய செய்திகள்:
டெல்லி வந்துள்ள ஜப்பான் மன்னர் அகிஹிடோ, குடியரசுத் துணைத்தலைவரை சந்தித்து, இருதரப்பு உறவு மேம்பாடுகள் குறித்து ஆலோசனை

டெல்லி வந்துள்ள ஜப்பான் மன்னர் அகிஹிடோ, குடியரசுத் துணைத்தலைவரை சந்தித்து, இருதரப்பு உறவு மேம்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்திய வரலாற்றில் ஜப்பான் மன்னர் வருகை தருவது இதுவே முதன்முறையாகும். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பட்டத்து இளவரசராக இருந்தபோது வருகை தந்த அகிஹிடோ, தனது மனைவி மிச்சிகோவுடன் தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளார். டெல்லியில் அவர், குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஹமீத் அன்சாரி மற்றும் பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் திருமதி. சுஷ்மாசுவராஜ் ஆகியோரை நேரில் சந்தித்தார். திரு. ஹமீது அன்சாரியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்திய அகிஹிடோ, இந்தியாவில் செயல்படுத்தவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதித்தார். மன்னர் தம்பதி வருகிற 5ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்.

மேலும் செய்திகள்