முக்கிய செய்திகள்:
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு ஆயுதங்களை ஏந்திச்செல்லும் பிருத்வி-2 ஏவுகணை - இந்தியா வெற்றிகரமாக சோதனை

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு ஆயுதங்களை ஏந்திச்செல்லும் பிருத்வி-2 ஏவுகணையை, இந்தியா வெற்றிகரமாக இன்று சோதனை செய்துள்ளது.

பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் இந்திய பாதுகாப்புத்துறை அதிநவீன ஏவுகணைகளை தயாரித்து பரிசோதனை செய்து வருகிறது. இதன் அடிப்படையில், அணு ஆயுதங்களை ஏந்திச்செல்லும் பிருத்வி-2 ஏவுகணை, ஒடிசா மாநிலத்தில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து இன்று சோதனை செய்யப்பட்டது. சந்திப்பூர் கடல் பகுதியில் சோதனை செய்யப்பட்ட இந்த ஏவுகணை, 350 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்துசென்று துல்லியமாக தாக்கக்கூடிய வல்லமை பெற்றதாகும்.

மேலும் செய்திகள்