முக்கிய செய்திகள்:
குற்றம்சாட்டப்பட்ட இளைஞர்கள் மீது ஆந்திர போலீசார் கண்மூடித்தனமான தாக்குதல் - பொதுமக்கள் அதிருப்தி

பொதுமக்கள் முன்னிலையில், குற்றம்சாட்டப்பட்ட சில இளைஞர்களை ஆந்திர போலீசார் கண்மூடித்தனமாக அடித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குண்டகால் நகரில் கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய சில இளைஞர்களை, பொதுமக்கள் முன்னிலையில், ஆந்திர போலீசார் அடித்து, மன்னிப்புக்கேட்க செய்துள்ளனர். இச்சம்பவத்தை செல்ஃபோனில் படம்பிடித்த சிலர், அதை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆந்திர போலீசாரின் இந்த நடவடிக்கையால், அம்மாநில மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

மேலும் செய்திகள்