முக்கிய செய்திகள்:
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹண்ட்வாரா பகுதியில் பாதுகாப்புப்படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

குளிர்காலம் தொடங்குவதையொட்டி, ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவும் நடவடிக்கையில் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளதைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், பட்காம் மாவட்டத்தின் எல்லை பகுதியில் ராணுவ முகாமை நோக்கி திடீரென தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், சபீர் அகமது என்ற ராணுவ அதிகாரி பலியானார். பாதுகாப்புப் படையினர் எதிர்த்தாக்குதல் நடத்தியபோதிலும், தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 3 வீரர்கள், ஸ்ரீநகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹண்ட்வாரா பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்