முக்கிய செய்திகள்:
டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை விசாரிக்க வேண்டும் என பெற்றோர் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய 16 வயதுக்குட்பட்ட குற்றவாளியை வயது வந்தவராகக் கருதி விசாரிக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டார். பேருந்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட அவர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடெங்கும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றம்சாட்ட 6 பேரில், 16 வயதுக்குட்பட்ட சிறுவனுக்கு, 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த டெல்லி மாணவியின் பெற்றோர், 16 வயதுக்குட்பட்ட குற்றவாளியை வயது வந்தவராகக் கருதி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனிடையே, கொடிய வழக்குகளில் 16 வயதுக்குட்பட்ட குற்றவாளிகளை வயது வந்தவராகக் கருதி விசாரிக்க வேண்டும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்