முக்கிய செய்திகள்:
மேற்குவங்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை சுமார் 4 ஆண்டுகாலமாக சங்கிலியால் கட்டி வைத்துள்ள தாய்

மேற்குவங்க மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனை, அவனது தாய் சுமார் 4 ஆண்டுகாலமாக சங்கிலியால் கட்டி வைத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சிங்புரா கிராமத்தில், அரோத்தி சிங் என்பவரது மகன் தபாஸ் சிங் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவம் அளிக்க பெற்றோர்கள் தங்களால் இயன்ற முயற்சியை எடுத்து வருகின்றனர். எனினும், போதுமான வருமானமும், உதவியோ இல்லாததால், அவர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியவில்லை.

இந்நிலையில், தபாஸ் சிங்கை அவரது தாயார் அரோத்தி சிங் கடந்த 4 ஆண்டுகளாக சங்கிலியால் வீட்டில் கட்டி வைத்து வளர்த்து வருகிறார். தபாஸ் சிங் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையும், வீட்டில் உள்ளவர்களையும் அடித்துக் காயப்படுத்துவதால், அவரை கட்டிவைத்துள்ளதாக கூறும் அரோத்தி சிங், தனக்கு இதுபோன்று செய்வது மனதுக்கு வேதனையளித்தபோதிலும், வேறுவழியில்லை எனத் தெரிவித்துள்ளார். தற்போது மனநிலை பாதிக்கப்பட்டு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டுள்ள தபாஸ் சிங், கல்வியில் சிறந்து விளங்கியவர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்