முக்கிய செய்திகள்:
போபால் விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, மீண்டும் போராட்டம் - இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை

போபால் விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, அவர்களது உறவினர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும், இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், அமெரிக்காவின் யூனியன் கார்பைட் நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையில் இருந்து 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் நாள் நள்ளிரவு திடீரென விஷவாயு கசிந்ததால் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் நிரந்தர ஊனமாயினர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த நிறுவனம், மற்றொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில் பாதிக்கப்பட்ட மக்கள், உரிய நிவாரணம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே, அதற்கான நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும், விஷவாயு கசிவுக்கு காரணமானவர்களைத் தண்டிக்கக்கோரியும் போபாலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடை வாங்கித்தர அரசு முனைப்புக்காட்டவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் செய்திகள்