முக்கிய செய்திகள்:
இந்தியா வந்துள்ள ஜப்பானிய பேரரசர் அகிடோ, பேரரசி மிச்சிகோ ஆகியோர் டெல்லி லோதி தோட்டத்தை பார்வையிட்டனர் : விதவிதமான பூக்களை ரசித்து மகிழ்ந்தனர்

6 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பானிய பேரரசர் அகிடோ, பேரரசி மிச்சிகோ ஆகியோர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ​லோதி தோட்டத்தில் உலாவி மகிழ்ந்தனர்.

கடந்த 1960 ஆம் ஆண்டு திருமணம் முடித்த நிலையில், ஜப்பானிய பேரரசர் அகிடோ, பேரரசி மிச்சிகோ ஆகியோர், முதல்முறையாக இந்தியா வந்ததையடுத்து, தற்போது 53 ஆண்டுகளுக்குப் பின், இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் டெல்லி வந்த அவர்களை, பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் வரவேற்றார். பேரரசரும், பேரரசியும் நேற்று புகழ்பெற்ற லோதி தோட்டத்தை பார்வையிட வந்தபோது, அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தோட்டத்தில் சுமார் 2 மணிநேரம் உலா வந்த ராஜதம்பதியர், இன்று குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர் ஆகியோருடன் இந்தியாவுக்கு ஜப்பான் அளித்துவரும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

மேலும் செய்திகள்