முக்கிய செய்திகள்:
தனித் தெலங்கானா அமைப்பது குறித்த மசோதா நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் 4 எம்.பி.க்கள் ராஜினாமா

தனித் தெலங்கானா அமைப்பது குறித்த மசோதா, இம்மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அறிவித்துள்ளதற்கு எதிர்ப்புத் ​தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் 4 எம்.பி.க்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். இதனையடுத்து சீமாந்திரா பகுதியில் காங்கிரஸ் முற்றாக அழிந்துவிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவின் கரீம் நகர், நளகொண்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களைப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்க மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவெடுத்தது. அதனையடுத்து ஆந்திராவில் பெருங்கலவரங்கள் வெடித்தன. காங்கிரஸ் கட்சியிலிருந்து, அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். இதன் உச்ச‍கட்டமாக நேற்று சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த ராஜகோபால், சாய்பிரசாந்த், சப்பம்ஹரி, அருண்குமார் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனையடுத்து சீமாந்திரா பகுதியில் காங்கிரஸ் முற்றாக அழிந்துவிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்