முக்கிய செய்திகள்:
ராஜஸ்தானில் நாளை சட்டமன்ற தேர்தல் - அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ராஜஸ்தானில் நாளை ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில், சூரூ தொகுதிக்கான தேர்தல் வேட்பாளர் மரணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 199 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 4 கோடியே 6 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 2 ஆயிரத்து 87 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆளும் காங்கிரஸ், எதிர்கட்சியான பாரதிய ஜனதா ஆகியவை அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. பகுஜன் சமாஜ் கட்சி, சங்மாவின் தேசிய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. அனைத்து வாக்குசாவடிகளிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்