முக்கிய செய்திகள்:
பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி மீது குற்றச்சாட்டு - விசாரணைக் குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம்

பெண் வழக்கறிஞர் அளித்த பாலியல் புகாரில் உண்மையில்லை என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி தெரிவித்துள்ளார். தன்மீதான குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சிக்காக சென்றபோது, உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரை அடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம். லோதா, ஹெச்.எல். தத், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய குழுவை, தலைமை நீதிபதி திரு. சதாசிவம் நியமித்தார். இக்குழு நடத்திய விசாரணையில், புகார் ​தெரிவிக்கப்பட்ட நீதிபதி, ஏ.கே. கங்குலி என்பது தெரியவந்தது. இதையடுத்து, விசாரணை அறிக்கையை நீதிபதிகள் குழுவினர் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். ஆனால், தன் மீதான புகாரில் உண்மையில்லை என தெரிவித்த திரு. கங்குலி, குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். நீதிபதி ஏ.கே. கங்குலி, கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்