முக்கிய செய்திகள்:
தெலங்கானா விவகாரம் - மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் வருகிற 3ம் தேதி டெல்லியில் ஆலோசனை

தெலங்கானா விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் வருகிற 3ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

தனித் தெலங்கானாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்புத் தெரிவித்தும் ஆந்திராவில் நடைபெறும் போராட்டங்கள் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. தெலங்கானா விவகாரம் குறித்து ஆய்வு நடத்துவதற்காக, மத்திய அரசு நியமித்த அமைச்சர் குழுவினர், இருதரப்பினரிடையும் ஆலோசனை நடத்திய பின்னர், தங்களது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் திரு. சுஷில்குமார் ஷிண்டே, தனித் தெலங்கானா விவகாரம் தொடர்பாக, அமைச்சர்கள் குழு அளித்த அறிக்கை மீது விவாதம் நடத்த மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் வருகிற 3ம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில், தனித் தெலங்கானா அமைப்பதற்கு இறுதிவடிவம் கொடுக்கப்படும் என்றும் திரு. ஷிண்டே தெரிவித்தார். பொதுவான தலைநகராக ஹைதராபாத் இருக்க வேண்டும் என்றும், பிரிவினைக்குப் பின்னர், ஹைதராபாத்தில் வாழும் சீமாந்திரா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவேண்டும், சுமூகமான நிலை ஏற்படும் வரை சட்டம்-ஒழுங்கு, வருவாய்த்துறை உள்ளிட்டவற்றை மத்திய அரசு கவனிக்க​வேண்டும் என்பன உள்ளிட்ட பரிசீலனைகள் குறித்து விவாதம் நடத்தப்படும் எனத் தெரிகிறது.

மேலும் செய்திகள்