முக்கிய செய்திகள்:
வெற்றிப்பாதையில் மங்கள்யான் விண்கலம் - பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து விலகி இன்று நள்ளிரவு செவ்வாயை நோக்கி நீண்ட பயணத்தை தொடங்குகிறது

பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து விலகி, இன்று நள்ளிரவு செவ்வாயை நோக்கி நீண்ட பயணத்தை மங்கள்யான் விண்கலம் தொடங்குகிறது.

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இஸ்ரோ அனுப்பியுள்ள மங்கள்யான் விண்கலம், அதன் செலுத்து வாகனத்தின் மூலம் பூமியில் இருந்து சுமார் 2 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. திட்டமிட்டபடி, வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் மங்கள்யான் விண்கலம், இன்று பூமியின் சுற்றுப் வட்டப் பாதையில் இருந்து விலகி, செவ்வாய் கிரகத்தை நோக்கி, தனது நீண்ட பயணத்தை இன்று நள்ளிரவு தொடங்குகிறது. அனைத்து தொழில்நுட்பப் கருவிகளும் மிக துல்லியமாக செயல்படுவதாக தெரிவித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள், 198 கிலோ எரிபொருளை எரித்து, அதனால் கிடைக்கும் விநாடிக்கு 648 மீட்டர் வேகத்தில் தனது பயணத்தை தொடங்கும் என குறிப்பிட்டுள்ளனர். அனைத்து கருவிகளும் பழுதின்றி செயல்படும் பட்சத்தில், இன்னும் 270 நாட்கள் பயணம் செய்து, மங்கள்யான் விண்கலம், 7 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை அடையும் என விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்