முக்கிய செய்திகள்:
கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத், ஜாமீன் மனு - பதிலளிக்குமாறு சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீது, சி.பி.ஐ., பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற கால்நடை தீவன ஊழல் வழக்கில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சித்தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் உள்பட பலருக்கு, அம்மாநில உயர்நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. லாலுவுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் இழந்தார். இந்நிலையில், ஜாமீன் கோரி, லாலு தாக்கல் செய்த மனுவை, பீகார் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, லாலு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களுக்குப் பின்னர், இந்த மனு மீது பதிலளிக்க சி.​பி.ஐ., க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், வழக்கின் இறுதி விசாரணையையும் வரும் 13ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

மேலும் செய்திகள்