முக்கிய செய்திகள்:
மத்திய அரசு செயல்படுத்தி வரும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் பலன் தருவதாக இல்லை - மத்திய திட்டக்குழு அறிக்கை

மத்திய அரசு செயல்படுத்தி வரும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் பலன் தருவதாக இல்லை என்று மத்திய திட்டக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், ஏழை மக்களை வறுமைக் கோட்டுக்கு மேலே கொண்டு வருவது சாத்தியப்படாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் வறுமை ஒழிப்புத் திட்டங்களின் மீது, மத்திய திட்டக்குழு ஒவ்வோர் ஆண்டும் அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில், 2011-2012-ம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு செயல்படுத்தி வந்த 7 வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 379 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும், முழுத்தொகையும் உரியவர்களுக்கு போய்ச் சேரவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அந்த வகையில், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் பலன் தருவதாக இல்லை என்றும், இதே நிலை தொடர்ந்தால், ஏழை மக்களை வறுமைக் கோட்டுக்கு மேலே கொண்டு வருவது சாத்தியப்படாது என்றும் மத்திய திட்டக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் செய்திகள்