முக்கிய செய்திகள்:
குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரிக்கும் வாய்ப்பு - ஜம்மு-காஷ்மீர் பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரம்

குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தும் நிலையில், அவர்களின் ஆதரவுடன் தீவிரவாதிகளும் ஊடுருவல் முயற்சியில் ஈடுபடுகின்றனர். தற்போது குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில், ஊடுருவல் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசார், பூஞ்ச் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். எல்லைப்பகுதியில் சுமார் 13 லட்சம் பாதுகாப்புப் படையினர் தற்போது கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்