முக்கிய செய்திகள்:
உத்தரப்பிரதேசத்தில் வேகமாக சென்ற கார் மோதியதில் 8 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் வேகமாக சென்ற கார் மோதியதில், 8 பேர் உயிரிழந்தனர்.

லகிம்புரி கேரி என்ற இடத்தில் சாலையில் வேகமாக சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. பின்னர் சாலையின் ஓரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்