முக்கிய செய்திகள்:
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை, பணம் பெற்றுக்கொண்டு இணையதளத்தில் சில அமைப்புகள் வெளியிடுவதாக திடுக்கிடும்

நன்றாக செயல்படும் ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை, பணம் பெற்றுக்கொண்டு இணையதளத்தில் சில அமைப்புகள் வெளியிடுவதாக திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.

Opreation Blue virus என்ற பெயரில் விசாரணையில் ஈடுபட்ட ஒரு அமைப்பு, சமூக வலைதளங்களான Face Book மற்றும் Twitter ஆகியவற்றில், உண்மைக்கு மாறான செய்திகளை, சுமார் 12 தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளியிட்டிருப்பது தெரியவந்தது. இதற்காக பெரும் தொகையை அந்த நிறுவனங்கள் பெற்றிருப்பது ​தெரியவந்துள்ளது. இதுகுறித்து தனியார் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை மட்டுமின்றி, அரசியல்வாதிகள், அரசியல்கட்சிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் குறித்தும் பொய்யான தகவல்களை வெளியிடும் முயற்சி​யில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்