முக்கிய செய்திகள்:
சத்தீஸ்கரில் நக்சலைட் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடும் சண்டை - 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப் படையினர் 4 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 4 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட பதிலடித் தாக்குதலில், 4 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பிஜப்பூர் மாவட்டம் மொடக்பால் பகுதியில், பாதுகாப்புப் படை வீரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், நக்சலைட் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத்தொடர்ந்து, தப்பியோடிய நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில் போலீசாரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் இணைந்து நடத்திய நக்சலைட் வேட்டையில் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆயுதங்கள் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்