முக்கிய செய்திகள்:
பாலியல் புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு கோவா போலீசார் சம்மன் - முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

பாலியல் புகார் தொடர்பாக, தெஹல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலிடம் விசாரணை நடத்த அவருக்கு கோவா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தெஹல்கா பத்திரிகை நிறுவனத்தின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அதே நிறுவனத்தைச் சேர்ந்த பெண் செய்தியாளர் புகார் அளித்திருந்தார். இகு குறித்து கோவா போலீசார் தேஜ்பால் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பையில் நேற்று அந்தப் பெண் நிரூபரிடம் விசாரணை நடத்திய கோவா போலீசார் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். மேலும், இது குறித்து தருண் தேஜ்பாலிடம் விசாரணை நடத்த, அவருக்கு கோவா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேஜ்பால் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்