முக்கிய செய்திகள்:
நாளை கரையைக் கடக்கிறது லெஹர் புயல் - ஆந்திர மாநில கடலோரப்பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

லெஹர் புயல் நாளை கரையைக் கடப்பதால், ஆந்திர மாநில கடலோரப் பகுதிகளில், பாதுகாப்பு நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய கடற்பகுதியைத் தாக்கும் இந்த ஆண்டின் 3-வது புயலான லெஹர் புயல், ஆந்திராவின் மசூலிப்பட்டினம் அருகே நாளை கரையைக் கடக்கிறது. அப்போது 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், கடலோரப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். எனினும் ஹெலன் புயலைப்போல இதன் தாக்கம் அதிகம் இருக்காது எனத் தெரிவித்துள்ள வானிலை அதிகாரிகள், தெலங்கானா பகுதியில் தொடர்ந்து கனமழை நீடிக்கும் எனத் தெரிவித்தனர். ஆந்திர கடலோர மாவட்டங்களில், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்