முக்கிய செய்திகள்:
பெங்களூரு ATM மையத்தில் வங்கி பெண் அதிகாரி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவ எதிரொலி - கர்நாடகாவில் பாதுகாப்பு இல்லாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட ATM மையங்கள் மூடப்பட்டன

பெங்களூரு ATM மையத்தில் வங்கி பெண் அதிகாரி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில், ஒரு வாரமாகியும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் கர்நாடக போலீசார் திணறி வரும் நிலையில், அந்நகரில் பாதுகாப்பு இல்லாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட ATM மையங்கள் மூடப்பட்டன.

பெங்களூருவில் கடந்த 19-ம் தேதி ATM மையத்தில் பணம் எடுக்க வந்த வங்கி பெண் அதிகாரி ஜோதி உதய், மர்ம நபரால் கொடூரமாக தாக்கப்பட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளியை கண்டுபிடிக்க 8 தனிப்படைகளை கர்நாடக மாநில போலீசார் நியமித்துள்ளனர். மேலும், குற்றவாளி குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், சம்பவம் நடைபெற்று 7 நாட்களாகியும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் அம்மாநில போலீசார் திணறி வருகின்றனர். இதையடுத்து, ATM மையங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும், எச்சரிக்கை மணி அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வங்கி நிர்வாகங்களுக்கு கர்நாடக போலீசார் அறிவுறுத்தினர். இதனை செயல்படுத்தாத ATM மையங்கள் தொடர்ந்து இயங்க அனுமதி மறுக்கப்படும் என்று பெங்களூரு மாநகர காவல்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்ததை அடுத்து, பெங்களூருவில் பாதுகாவலர்கள் இல்லாத ஆயிரத்து 37 மையங்கள் நேற்று மூடப்பட்டன.

மேலும் செய்திகள்