முக்கிய செய்திகள்:
பாலியல் பலாத்கார வழக்கில் தெஹல்கா பத்திரிகை முன்னாள் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பால் முன்ஜாமீன் கோரிய மனு மீது நாளை விசாரணை - டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு

பாலியல் புகாரில் சிக்கியுள்ள தெஹல்கா பத்திரிகை முன்னாள் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என டெல்லி உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பாலின் மீது அதே நிறுவனத்தின் பெண் நிருபர் ஒருவர் அளித்துள்ள பாலியல் புகார் தொடர்பாக கோவா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தேஜ்பால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வலியுறுத்தி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தன் மீதான வழக்கு ஜோடிக்கப்பட்டது என்றும், அதற்கு அரசியல் ரீதியான காரணங்கள் உள்ளது என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், கைது நடவடிக்கையை தடுக்க உடனடியாக உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்ததுடன், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. இதனிடையே, தருண்தேஜ்பால் மீது பாலியல் புகார் அளித்த பெண் நிருபரின் வாக்குமூலம் தொடர்பாக அவரிடம் மும்பையில் இன்று விசாரணை நடத்திய கோவா போலீசார், அதனை பதிவு செய்துகொண்டனர்.

மேலும் செய்திகள்