முக்கிய செய்திகள்:
வடமாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஆருஷி கொலை வழக்கு - பெற்றோர் குற்றவாளிகள் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வடமாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகியோர் கொலை வழக்கில், ஆருஷியின் பெற்றோர் குற்றவாளிகள் என, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படவுள்ளது.

டெல்லி அருகே நொய்டாவில் வசித்து வந்த ராஜேஷ்- நுப்பூர் தல்வார் மருத்துவ தம்பதியரின் மகள் ஆருஷியும், அவர்களது வீட்டில் பணியாற்றி வந்த ஹேம்ராஜும், கடந்த 2008-ம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். மருத்துவ தம்பதியர் வீட்டிலேயே அவர்களது மகளும், பணியாளரும் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம், நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த இரட்டை கொலைக்கு, ஆருஷியின் பெற்றோரே காரணம் என தெரியவந்தது. காசியாபாத் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆருஷியின் பெற்றோர், ராஜேஷ், நுப்பூர் தல்வார் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி திரு. ஷியாம் லால் தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை வெளியிடப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஜாமீனில் உள்ள ஆருஷியின் பெற்றோர், உத்தரப்பிரதேசத்தில் உள்ள தாஸ்னா சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

மேலும் செய்திகள்