முக்கிய செய்திகள்:
நாடாளுமன்ற தேர்தலையும், சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களையும் சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சி - பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை

நாடாளுமன்ற தேர்தலையும், சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களையும் சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார்.

டெல்லியில், தேசிய உளவு நிறுவனத்தின் ஆண்டு விழாவில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலையும், சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களையும் சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என்பதால், பாதுகாப்புத்துறையினர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் முஷாபர்நகர் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வகுப்பு மோதல் மீண்டும் ஏற்படாமல் தடுக்க சட்டம்-ஒழுங்கு முறையாக கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் டாக்டர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார். அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வகுப்பு கலவரங்களை நாம் சகித்து கொண்டிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். உளவுத்துறையின் மேன்மையை போற்றும் வகையில், இரவும், பகலும் விழித்திருப்போம் என அச்சிடப்பட்ட தபால் தலையையும் இந்நிகழ்ச்சியின்போது பிரதமர் வெளியிட்டார்.

மேலும் செய்திகள்