முக்கிய செய்திகள்:
கேரளாவை உலுக்கிய ஐஸ்கிரீம் பார்லர் வழக்கு - சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கேரளாவை உலுக்கிய ஐஸ்கிரீம் பார்லர் வழக்கை, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் தாக்கல் செய்த மனுகுறித்து, பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில், கடந்த 1990-ஆம் ஆண்டு ஐஸ்கிரீம் பார்லரில் நடைபெற்ற பாலியல் முறைகேட்டில் அப்போதைய தொழில்துறை அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்த வழக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன், உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்