முக்கிய செய்திகள்:
இந்திய எல்லைக்குள், தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்படும் - ராணுவ உயரதிகாரிகள் உறுதி

இந்திய எல்லைக்குள், ஊடுருவ முயற்சிக்கும் தீவிரவாதிகளின் அனைத்து நடவடிக்கைகளும் முறியடிக்கப்படும் என ராணுவ உயரதிகாரிகள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டம், இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டதை நினைவுகூரும் விதமாக கடைபிடிக்கப்படும் லைன் அப் டே நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, பூஞ்ச் பகுதியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ராணுவ உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின்போது பேசிய இந்திய ராணுவத்தின் 25-வது படைப் பிரிவு ராணுவ உயரிதிகாரி மேஜர் ஜெனரல் வி.பி. சிங், இந்தியாவுக்குள் ஊடுருவ நினைக்கும் தீவிரவாதிகளின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என உறுதியுடன் தெரிவித்தார். இந்திய எல்லைக்குள் ஊடுருவும் நடவடிக்கையை, குளிர்காலத்தின்போது, தீவிரவாதிகள் மேற்கொள்கின்றனர் என்றும், இதனை முறியடிக்க, தற்போது வீரர்கள் தயாராக இருப்பதாகவும் வடக்கு பிராந்திய தலைமை அலுவலக கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் டி.எஸ்.ஹூடா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்