முக்கிய செய்திகள்:
பாலியல் புகாரில் சிக்கிய தெஹல்கா இணையதள ஆசிரியர் மீது கோவா போலீசார் வழக்குப் பதிவு

பாலியல் புகாரில் சிக்கிய தெஹல்கா இணையதள ஆசிரியர் மீது கோவா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தெஹல்கா இணையதளத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் அளித்த புகாரை அடுத்து, அதன் நிர்வாக ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கோவா மாநில டி.ஐ.ஜி கிஷன்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த இணையதளத்தின் நிறுவன ஆசிரியர் ஷோமா சவுத்ரி, இது பொய்யான புகார் என தருண் தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார். இதனிடையே, மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் பேசிய பாரதிய ஜனதா மூத்த தலைவர் திரு.அருண்ஜேட்லி, தருண் தேஜ்பால் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்