முக்கிய செய்திகள்:
ஆந்திர மாநிலத்தைத் தாக்கிய "ஹெலன்" புயல் மற்றும் கடும் மழையில் சிக்கி 10 பேர் பலி : லட்சக் கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

ஆந்திர மாநிலத்தைத் தாக்கிய "ஹெலன்" புயல் மற்றும் கடும் மழையில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விளை நிலங்களில், பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

வங்கக்கடலில் உருவான ஹெலன் புயல், நேற்று ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே கடற்கரையை கடந்தது. அப்போது சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால், பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக கிருஷ்ணா, நெல்லூர், குண்டூர், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. புயல் மற்றும் மழையினால் இம்மாவட்டங்கள் இருளில் மூழ்கின. புயல் மற்றும் கனமழையால், கோதாவரி, கிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாகுளம் பகுதிகளில் 10 பேர் உயிரிழந்தனர். புயல் காரணமாக, கடலில் சிக்கி மாயமான 20 மீனவர்களை, கடற்படை ஹெலிகாப்டர்களில் மீட்புப்படையினர், தீவிரமாக தேடி வருகின்றனர்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், புயலில் சிக்கி, தென்னந்தோப்புகள் அழிந்தன. மேற்கு கோதாவரி மாவட்டத்தில், லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. ஆந்திர அரசு, நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்