முக்கிய செய்திகள்:
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் விண்கலம் : 70 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட முதல் புகைப்படத்தை பூமிக்கு அனுப்பியது

மங்கல்யான் விண்கலம், வரும் ஒன்றாம் தேதி புவி வட்டப்பாதையிலிருந்து விலகி, செவ்வாய் நோக்கி பயணத்தை தொடங்க உள்ள நிலையில், முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.

இஸ்ரோ சார்பில் கடந்த 5-ம் தேதி செவ்வாய்கிரத்திற்கு ஏவப்பட்ட மங்கல்யான் விண்கலத்தின் புவிவட்டப்பாதையின் தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி, வரும் ஒன்றாம் தேதி புவி வட்டப்பாதையிலிருந்து விலகி செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது பயணத்தை மங்கல்யான் தொடங்க உள்ளது. இந்நிலையில், விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த மார்ஸ் வண்ண புகைப்படக் கருவியின் மூலம் கடந்த 19-ம் தேதி 2 புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக இஸ்ரோ வெயிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து சுமார் 70 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதையடுத்து, மங்கல்யான் விண்கலம் சரியான முறையில் இயங்கி தனது பணியை தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருவதால், தற்போது, இந்த புகைப்படங்களை வெளியிட இயலாது என தெரிவித்துள்ள இஸ்ரோ, சிறிதுகால இடைவெளிக்குப் பின்னர் பொதுமக்களின் பார்வைக்கு இந்த புகைப்படம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்