முக்கிய செய்திகள்:
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆயத்தம் - உளவுத்துறைவெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவலால் பரபரப்பு

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஊடுருவுவதற்கு நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை ராணுவ அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

இந்திய எல்லைப் பகுதியில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அண்மைக்காலமாக பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் ஆதரவோடு பயிற்சி பெற்ற அந்நாட்டு தீவிரவாதிகளும், ஜம்மு-காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவும் வகையில் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் பலமுறை பாகிஸ்தான் படையினர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், ஜம்மு எல்லையில் ஊடுருவ 300-க்கும் அதிகமான தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை மூலம் கிடைத்துள்ள அதிர்ச்சித் தகவலை ராணுவ அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார். குளிர்காலம் தொடங்குவதற்கு முன் அவர்கள் அனைவரும் இந்திய எல்லைக்குள் ஊடுருவி சதித் திட்டங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால், அவர்களின் இந்த முயற்சியை தாங்கள் முடியடிப்போம் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

மேலும் செய்திகள்