முக்கிய செய்திகள்:
உத்தரபிரதேசத்தில், காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்ற ஊர்வலத்தில் வன்முறை - போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தால் பரபரப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உணவுப் பாதுகாப்பு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரி, காங்கிரஸார் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து, போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

லக்ணோவில் திரண்ட காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர், உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக் கோரி, ஊர்வலமாக சென்றனர். போலீசாரின் தடையை மீறி சென்ற அவர்கள், மாநில சட்டமன்ற பேரவை கட்டடத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒருபிரிவினர், சாலையில் இருந்த தடுப்பு கட்டைகளை எடுத்து வீசியெறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். அதனை, அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் தடுத்தபோது, அவர்களை காங்கிரஸ் கட்சியினர் தாக்கினர். இதனையடுத்து, வன்முறையில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்