முக்கிய செய்திகள்:
மும்பையில் உள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதியில் பெரும் தீவிபத்து - ஏராளமான பொருட்கள் சேதம்

மும்பையில் உள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதனால், ஏராளமான பொருட்கள் சேதத்திற்கு உள்ளாயின.

மஹாராஷ்ட்ர மாநிலம் மும்பையில், நாட்டின் மிகப்பெரிய குடிசைப் பகுதி அமைந்துள்ளது. சுமார் 10 குடிசைகள் அமைந்துள்ள அந்தப் பகுதியில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீ வேகமாக பரவியது. இதுபற்றிய தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால், தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்ற போதிலும் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகி இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதேபோல், அங்கு தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு முகாமிலும் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைப்பதற்குள் அந்த தற்காலிக முகாம் தீயில் எரிந்து சேதமடைந்தது. இவ்விரு தீவிபத்துகளாலும் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்