முக்கிய செய்திகள்:
பெட்ரோலைப் போல, டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு - அனைத்துப் பொருட்களின் விலைவாசி உயரும் அபாயம்

பெட்ரோலைப் போல, டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் டீசல் விலை அதிகரித்து, அதன் விளைவாக அனைத்துப் பொருட்களின் விலைவாசியும் உயரும் அபாயம் எழுந்துள்ளது.

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு கடந்த 2010-ம் ஆண்டு எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்கியது. இதனால், பெட்ரோல் விலை அவ்வப்போது உயர்ந்துகொண்டே வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டீசல் விலை நிர்ணய அதிகாரத்தையும் எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது என மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதனை, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு.வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார். இன்னும் 6 மாத காலத்தில் எண்ணெய் நிறுவனங்களிடம் டீசல் விலை நிர்ணய அதிகாரம் ஒப்படைக்கப்படும் என அவர் கூறினார்.

டீசல் விலை தற்போது மாதம் 50 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்கும்போது, விலை உயர்வு கடுமையாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. இதன் விளைவாக, விலைவாசி கட்டுக்கடங்காமல் உயரும் அபாயம் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்