முக்கிய செய்திகள்:
பெங்களூரு ஏ.டி.எம். மையத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட வங்கி பெண் அதிகாரியின் உடல்நிலையில் முன்னேற்றம் - காவலர்கள் இல்லாத ஏ.டி.எம்.களை மூட மத்திய அரசு உத்தரவு

பெங்களூரு ஏ.டி.எம். மையத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட வங்கி பெண் அதிகாரியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காவலர்கள் இல்லாத ஏ.டி.எம்.களை மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் என்.ஆர். சர்கிள் பகுதியில் காவல்நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றில் பணம் எடுக்கச் சென்ற ஜோதி உதய் என்ற வங்கி பெண் அதிகாரியை, அரிவாளால் மர்ம நபர் ஒருவன் வெட்டிச் சாய்த்தான். கண்காணிப்பு கேமிராவில் பதிவான இந்தக் காட்சி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர், ஒருகட்டத்தில், ஆத்திரமடைந்து ஜோதியை தாக்கியதாக அவரது கணவர் உதய் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜோதியின் உடல்நிலை அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அவரது மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, உடலின் வலது பாகம் செயலிழந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கர்நாடக அமைச்சர் திரு. சுஷில்குமார் ஷின்டே, காவலர்கள் இல்லாத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் என தெரிவித்தார். இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட மர்ம நபரைப் பிடிப்பதற்காக, கர்நாடக அரசு 8 தனிப்படைகளை அமைத்துள்ளது.

மேலும் செய்திகள்