முக்கிய செய்திகள்:
அஸ்ஸாமில், ரயிலில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு- உரிய நேரத்தில் அகற்றப்பட்டதால், பெரும் விபத்து தவிர்ப்பு

அஸ்ஸாமில், ரயிலில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த 7 கிலோ வெடிகுண்டு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

காமக்யா ரயில் நிலையத்திற்கு வந்த அலிபுர்தோர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, ரயில்வே போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். 2 மணி நேரங்கள் நீடித்த இந்த சோதனையில், 7 கிலோ எடைகொண்ட டிபன் பாக்ஸ் குண்டுகள் ஒரு பையில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் ரயில்வே நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ரயில் நிலையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனையடுத்து குண்டுகளை கைப்பற்றிய போலீசார் அதனை செயலிழக்க வைத்தனர். ரயில்வே போலீசார் துரித கதியில் மேற்கொண்ட இந்த நடவடிக்கையால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்