முக்கிய செய்திகள்:
ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காக தொடரும் போராட்டம் - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் ஆதரவு கோரினார் ஜெகன்மோகன் ரெட்டி

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தும் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா அமைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில் ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தேசிய தலைவர்களை சந்தித்து, ஆதரவு கோரும் முயற்சியில் ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ஜெகன்மோகன் ரெட்டி ஈடுபட்டு வருகின்றார். இதற்காக, கொல்கத்தா சென்ற திரு. ரெட்டி, மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியை சந்தித்தார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படாமல், எந்த மாநிலமும் பிரிக்கப்படக் கூடாது என தாம் வலியுறுத்தியதாக திரு. ஜெகன்மோகன் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வி. மம்தா பானர்ஜி, திரு. ஜெகன்மோகன் ரெட்டியின் கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்