முக்கிய செய்திகள்:
ஜார்க்கண்ட் மாநிலத்தில், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவர் கைது - ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தகவல்

ஜார்க்கண்ட் மாநிலத்தில், மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவரை கைது செய்து, அவரிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்திருப்பதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஜார்க்கண்ட் மாநிலமும் ஒன்றாகும். மாவோயிஸ்ட்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் அம்மாநில போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் பலமு மாவட்டத்தில், நிர்மல் புயான் என்ற மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள லோஹர்டகா பகுதியில், இளஞ்சிறார்களை, தங்கள் அமைப்பில் சேரும்படி மாவோயிஸ்ட்கள் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி, தங்கள் பிள்ளைகளுடன் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக, லோஹர்டகா பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்