முக்கிய செய்திகள்:
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி பெயரை பயன்படுத்தக் கூடாது - சமூக சேவகர் அன்னா ஹசாரே கண்டிப்பு

டெல்லி சட்டமன்றத் தேர்தலில், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி, தனது பெயரை, எந்தவகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

அன்னா ஹசாரேவின் ஆதரவாளராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால், பின்னர் ஆம்ஆத்மி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். டெல்லியில் வரும் 4ம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் இக்கட்சி போட்டியிடுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் ஆம்ஆத்மி கட்சி, தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என அன்னாஹசாரே கூறியுள்ளார். இதனை வலியுறுத்தி அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் தனது படங்களை பயன்படுத்துவதற்கும் ஹசாரே ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்