முக்கிய செய்திகள்:
ஜார்க்கண்ட்டில் இயக்கத்தில் சேரும்படி சிறுவர், சிறுமிகளுக்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மிரட்டல் - நகரங்களை நோக்கி வெளியேறும் கிராமமக்கள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சிறுவர், சிறுமிகளை வலுக்கட்டாயமாக தங்கள் இயக்கத்தில் சேர்த்து வருவதால், பீதியடைந்துள்ள கிராம மக்கள், நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டு இயக்கம் மிகவும்; வலுவாக உள்ளது. அந்த இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிராமங்களுக்கு செல்லும் தீவிரவாதிகள், கிராமவாசிகளை மிரட்டி அவர்களின் பிள்ளைகளை வலுகட்டாயமாக தங்கள் இயக்கத்தில் சேர்த்து வருகின்றனர். இதனால் பீதியடைந்த 130 குழந்தைகள் தங்கள் கிராமங்களைவிட்டு நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். குழந்தைகளுடன், பெற்றோர்களும் ஊரை காலி செய்துவிட்டு நகரங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். நிலைமையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்