முக்கிய செய்திகள்:
மாட்டுத்தீவன ஊழல் வழக்கு விவகாரம் - சிறையில் உள்ள பீஹார் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ், காணொலிக்காட்சி மூலம் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சாட்சியம்

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீஹார் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ், சிறையிலிருந்தவாறே காணொலிக்காட்சி மூலம் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

பீஹார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலுபிரசாத் யாதவ், தனது ஆட்சியின்போது, மாட்டுத்தீவனங்கள் வாங்கிய வகையில் சாய்பாசா கருவூலத்திலிருந்து சுமார் 38 கோடி ரூபாய் முறைகேடாக எடுத்ததாக சி.பி.ஐ. நீதிமன்றம் அவருக்கு கடந்த மாதம் 3-ம் தேதி ஐந்தாண்டு சிறை தண்டனையும், 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, லாலுபிரசாத் ராஞ்சி சி‌றையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தேவ்கர் கருவூலத்தில் 97 லட்சம் ரூபாய் மற்றும் தும்கா கருவூலத்தில் சுமார் மூன்றரை கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் லாலுபிரசாத் சிறையில் இருந்தவாறே சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி திரு.பிரவாஸ் குமார் சிங் முன்னிலையில் காணொலிக்காட்சி மூலமாக இன்று சாட்சியமளித்தார்.

மேலும் செய்திகள்