முக்கிய செய்திகள்:
உத்தரப்பிரதேச படகு விபத்தில் 10 பேர் பலி - மீட்பு நடவடிக்கை தீவிரம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பாரைச் மாவட்டத்தில் நடைபெறும் கண்காட்சியை கண்டுகளித்துவிட்டு கிராமவாசிகள் அவர்களது கிராமத்திற்கு படகில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, படகில் ஆட்கள் அதிகமாக இருந்ததாலும், படகு சிறியதாக இருந்ததாலும், நடுவழியில் படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில், 10 பேர் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர். மற்றவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்