முக்கிய செய்திகள்:
உச்சநீதிமன்றத்தை விமர்சித்த விவகாரம் - ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங் நிபந்தனையற்ற மன்னிப்பு

உச்சநீதிமன்றத்தை விமர்சித்த விவகாரத்தில் ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

வயது சர்ச்சை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தாம் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் கையாண்ட விதம் குறித்து, ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங் கேள்வி எழுப்பியிருந்தார். நிர்பந்தம் காரணமாக தனது வழக்கில் உத்தரவு பிரப்பிக்கப்பட்டதாகவும், அவர் குறைகூறியிருந்தார். இதனையடுத்து, வி.கே.சிங்கிற்கு எதிராக உச்சநீதிமன்றம் தாமாக வழக்குபதிவு செய்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு வழக்குரைஞர் மூலம் உச்சநீதிமன்றத்திற்கு பதில் தாக்கல் அளித்துள்ள வி.கே.சிங், நீதித்துறைமீது பெரும் மரியாதை வைத்துள்ளதாகவும், சில வழக்குகளின்போது அளிக்கப்படும் தீர்ப்புகள் குறித்து சர்ச்சைகள் எழும்புவது நீதிபதிகள் கடவுளர்க்கு ஒப்பானவர்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது கருத்துக்கள் நீதிபதிகளை குற்றம் சுமத்தும் வகையில் இருந்தால், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் வி.கே.சிங் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை நாளை நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்