முக்கிய செய்திகள்:
CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், CBSE தேர்வு தேதியில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் வரும் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அட்டவணை பின்னர் வெளியிடப்படவுள்ள நிலையில், இதுகுறித்த விவரங்களை cbse.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தேர்வு கால அட்டவணை அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றும், சென்னை மண்டலத்தில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதவிருப்பதாகவும், சுமார் 80 ஆயிரம் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வு எழுத உள்ளதாகவும் தேர்வுத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்