முக்கிய செய்திகள்:
தேர்தல் பிரச்சாரத்தின்போது பத்திரிகைகளில் அவதூறு விளம்பரம் – ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என சோனியா காந்திக்‍கு மத்தியப்பிரதேச முதலமைச்சர் நோட்டீஸ்

தேர்தல் பிரச்சாரத்தின்போது பத்திரிகைகளில் அவதூறாக விளம்பரம் அளித்ததாக, காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியாகாந்திக்‍கு மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு.சிவராஜ்சிங் சவுஹான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சி 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள முன்னணி பத்திரிகைகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் அளிக்‍கப்பட்ட விளம்பரத்தில், அம்மாநில முதலமைச்சர் திரு.சிவராஜ்சிங் சவுஹானும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரும், மத்தியப்பிரதேச மாநிலத்தை கொள்ளையடித்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அம்மாநிலத்தை விற்பனை செய்து ஊழலில் திளைத்துவிட்டதாகவும் தெரிவிக்‍கப்பட்டிருந்தது. இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் திருமதி.சோனியாகாந்தி மீது அவதூறு வழக்‍கு தொடர்ந்துள்ள திரு.சவுஹான், 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த வழக்‍கை நீதிமன்றத்தில் சந்திக்‍க தயாராக இருப்பதாக, மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் திரு.மானக்‍ அகர்வால் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்