முக்கிய செய்திகள்:
முஷாஃபர் நகர் கலவரம் - சி.பி.ஐ. விசாரிக்‍கக்‍ கோரும் மனுமீது விளக்‍கமளிக்‍கும்படி உத்தரப்பிரதேச அரசுக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவு

முஷாஃபர் நகர் கலவரத்தை சி.பி.ஐ. விசாரிக்‍க உத்தரவிட வேண்டும் என தாக்‍கல் செய்யப்பட்ட மனு குறித்து விளக்‍கமளிக்‍கும்படி, உத்தரப்பிரதேச அரசுக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் முஷாஃபர் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் இருதரப்புக்‍கு இடையே நிகழ்ந்த கலவரத்தில் 60க்‍கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் தொடர்பாக பல்வேறு மனுக்‍களை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாணைக்‍கு உத்தரவிட வேண்டும் என அம்மாநில ஜாட் மகாசபை என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்‍கு தாக்‍கல் செய்யப்பட்டது. இதனை இன்று விசாரித்த தலைமை நீதிபதி திரு.பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், இதுகுறித்து விளக்‍கமளிக்‍கும்படி உத்தரப்பிரதேச அரசுக்‍கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் வழக்‍கு விசாரணையை வருகிற 21-ம் தேதிக்‍கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்