முக்கிய செய்திகள்:
அறிவியலுக்கு போதுமான நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் கடும் கண்டனம்

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ், அறிவியலுக்கு போதுமான நிதி ஒதுக்காத மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.

சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ் என்று அழைக்கப்படும் சி.என்.ஆர்.ராவ், வேதியியலில் திடத்தன்மை குறித்து பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளை கண்டறிந்துள்ளார். மேலும், பிரதமருக்கு அறிவியல் சார்ந்த ஆலோசனை வழங்கும் குழுவின் தலைவராகவும் பணியாற்றி வரும் சி.என்.ஆர்.ராவ், அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்காததால், அறிவியல் குறித்த அறிவு மத்திய அரசுக்கு போதுமானதாக இல்லை என்ற பொருள்பட கடுமையாக சாடியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த ராவ், அரசு அளித்துள்ள நிதியை காட்டிலும் அளவுக்கு அதிகமான ஆராய்ச்சிகளை அறிவியல் துறை செய்து காட்டியுள்ள போதிலும், அரசியல்வாதிகள் அவற்றுக்கென போதுமான நிதி ஒதுக்கவில்லை என தெரிவித்தார். அறிவியல் ஆராய்ச்சிக்கென ஒதுக்கப்பட்ட நிதிக்கு தக்கவாறு பணியாற்ற வேண்டியுள்ளதாகவும், மத்திய அரசு அறிவியல் துறைக்கான நிதியை குறைவாக ஒதுக்குவதால், காலதாமதம் ஏற்படுவதாகவும் சி.என்.ஆர்.ராவ் குறிப்பிட்டார். மத்திய அரசின் கீழ் செயல்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோர் மகிழ்ச்சியின்றி வேலை செய்வதாகவும், அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளை, தான் பத்திரிகைகளில் படிப்பதாகவும் சி.என்.ஆர். ராவ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்